செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்துவந்தனர். அதே கட்டிட வேலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மலர் (45) என்ற பெண் சித்தாளாக வேலை செய்துவந்தார். […]
