திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருச்செந்தூர் கோவில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர்கள் அனைவருமே அவரவர் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடுக்கும் முடிவின்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறது. மத்திய அரசு […]
