மரத்தின் மீது ஸ்கூட்டர் மோதி விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் மேட்டு தெருவில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் மணி மகள் கோபிகா(17) என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் லாவண்யாவும், கோபிகாவும் கலந்து கொண்டனர். […]
