பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடையார் காலனி பகுதியில் தண்டீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வரதபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவதாரணி தனக்கு படிப்பு வரவில்லை என்றும், பள்ளி செல்ல விருப்பமில்லை என்றும் பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அதற்கு பவதாரணியின் பெற்றோர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, நன்றாக படிக்க வேண்டும் […]
