தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மணியாரம்பட்டியில் விஜயகுமார்(23) என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவியை டி.சுப்புலாபுரம் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் […]
