பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பெயிண்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தீபா இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு குரு பிரகாஷ்(15), மனோ(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி இருந்து ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]
