Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் இன்று பள்ளிகள் திறப்பு!”.. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மட்டும் அனுமதித்த தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில் பள்ளி பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வருமாறு தலீபான்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு இடைக்கால அரசை அமைத்திருக்கிறார்கள். இந்நிலையில், தலீபான்களின் கல்வித் துறை அமைச்சகமானது, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் பள்ளிகள் இன்றிலிருந்து திறக்கப்படவுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், ஆண் ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவிகள் பள்ளி வருவது தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. […]

Categories

Tech |