பேருந்தின் படிக்கட்டில் நின்று லாரியை பிடித்தவாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரிலிருந்து ஓமந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் பின்பக்க படிக்கட்டுகளில் 5 மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தனர். இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் பேருந்தை ஒட்டி லாரி ஒன்று சென்றது. அப்போது மாணவர்கள் லாரியில் கொக்கி, கம்பி போன்றவற்றை பிடித்ததை பார்த்த லாரி ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். […]
