சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
