மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உயர்நிலை குழு தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் நான்காம் […]
