பெற்றோர்கள் தங்களது கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுகளை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மாணவ, மாணவிகள் கற்கும் கல்வி தான் திருட முடியாத சொத்து. பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய மூவருடைய சிந்தனை நேர்கோட்டில் இருந்தால் தான் கல்வி நீரோடை […]
