பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் அருகே கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பயாட்றிஸ் தங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களிடம் 2 மத நூல்களை ஒப்பிட்டு ஒரு மதத்தை மட்டும் உயர்வாகப் பேசியுள்ளார். இதனையடுத்து ஒரு குறிப்பிட்ட மதத்தின் கருத்துக்களை எடுத்துக் கூறி அந்த மதத்தை பின்பற்றுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் […]
