தமிழக அரசு உத்தரவின் பேரில் பாளையங்கோட்டையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன் விளைவாக பள்ளிகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி செய்து தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டதின் பெயரில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட […]
