கடலூர் மாவட்டம் வானவாதேவியில் பள்ளி கட்டடத்தை இடிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வானமாதேவி கிராமத்தில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. தற்போது சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளி கட்டிடம் எடுக்கப்பட உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி கட்டிடத்தை இடிக்க கூடாது என்றும், இல்லையேல் புதிய கட்டடத்தை அமைத்த பின் சாலை பணிகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி உள்ளனர்.
