தேரியூர் மேல்நிலைப்பள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேரியூர் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித லைமை ஆசிரியர் சி.லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. […]
