அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 பேர் காயமடைந்து உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் நேற்று முன்தினம் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடந்தது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]
