சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ஒரு நபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள Tscharnergut என்ற பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சில மாணவர்கள் ஒரு நபரின் உடல் கிடப்பதை கண்டுள்ளனர். இதையடுத்து அந்த பள்ளியின் பாதி பகுதியை காவல்துறையினர் முடக்கி வைத்தனர். அதன்பின்பு, மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பி சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் மாணவர்களின் பெற்றோர், இது குறித்த சந்தேகங்களை பள்ளி நிர்வாகத்திடம் […]
