இலையூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சரியான நேரத்தில் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் சுமார் 400- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கபட்டு வருகிறது. இந்த மதிய உணவு மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படாமல் மற்றும் […]
