ஆட்டோவின் மேற்கூறையில் சிறுவர்கள் அமர்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பெரெய்லி என்ற பகுதியில் ஒரு ஆட்டோவின் மேற்கூறையில் சில சிறுவர்கள் அமர்ந்தவாறு பள்ளிக்கு செல்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகளே குழந்தைகளை அபாயகரமான முறையில் அழைத்துச் செல்வது […]
