இந்தோனேசியாவில் பேருந்து நிலையத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பள்ளி குழந்தைகள் உட்பட 10 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியை சேர்ந்த சிறுவர்கள், நேற்று வகுப்பு முடிந்த பின் வீட்டிற்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக கார்த்திருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் திடீரென்று லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிவேகத்தில் வந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. […]
