பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்ந்து 8 இயக்குனர்கள் 18 இணை இயக்குனர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் பள்ளிக்கல்வித்துறையில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி ரத்து செய்யப்பட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்பின் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளின் இயக்குனர், இணை இயக்குனர், பதவிகளில் உள்ள நான்கு பேரை தவிர மொத்தம் 26 […]
