பாலியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. புதிதாக ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயல்பாட்டால் ஆசிரியர்களும், மாவட்ட அதிகாரிகளும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். தினமும் பாடம் நடத்தும் நேரத்தை விட எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க ஆசிரியர்கள் பல மணி நேரம் போராட வேண்டி உள்ளது. இதன் ஒரு கட்டமாக மாணவ மாணவியரிடம் வகைகளில் 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு […]
