தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மேலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையை நீட்டிப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக மாநிலம் முழுவதிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ள அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்தது. இம்முறை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைவருக்கும் சங்கராந்தி விடுமுறையை மாநில அரசு நீட்டித்துள்ளதால், 2022 ஜனவரி 30ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
