நேற்று முன்தினம் (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை வண்ணார்ப்பேட்டை 51-வது வார்டு, பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் 179-வது வார்டு, மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டு, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16-வது வார்டு, திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டு உள்ளிட்ட 5 […]
