கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். […]
