அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தை அடுத்த இருக்கும் மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் குறுகலாக உள்ள பகுதியின் வழியே பேருந்துகள், வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக சரிவான சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளானதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சென்ற சில நாட்களாக மழை பெய்வதால் […]
