கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் ரீத்தாபுரம் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வர்கீஸ் தனது மகள் ஆஷா, பேத்தி சரியா ஆகியோருடன் திங்கள்சந்தையில் இருந்து காரில் அழகிய மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் நெய்யூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 25 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து தண்டவாளத்தில் கிடந்தது. அந்த சமயம் நாகர்கோவில் நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் டார்ச்லைட் அடித்து […]
