அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதில் சிறுமி பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று 70 பயணிகளை ஏற்றி கொண்டு காளிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த பேருந்து எலச்சிபாளையம் அருகே உள்ள மொஞ்சனூருக்கு சென்றபோது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனையடுத்து டிரைவர் துரிதமாக செயல்பட்டு அந்த பேருந்தை கவிழாமல் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. […]
