வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா என்ற மாகாணத்தில் மர்டன் மாவட்டத்திலிருந்து கால்கொட் நகருக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் உப்பர் டீர் மாவட்டத்தில் உள்ள மலை பகுதியில் உள்ள செங்குத்தான வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே […]
