பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதூரில் வசிக்கும் 22 பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் வசிக்கும் 4 பேர் எங்களிடம் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 10 மாதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். […]
