பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சின்னஆனையூர் பகுதியில் சக்திமுருகன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவரும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அழகுராஜாவும் டிராக்டரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மேலகன்னிசேரியை சேர்ந்த சிலர் முன்பகை காரணமாக சக்திமுருகனையும், அழகுராஜவையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சக்திமுருகன் இதுகுறித்து பேரையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் […]
