வரலாற்று ஆசிரியரும், பத்ம பூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளருமான பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே இன்று காலமானார். அவருக்கு வயது 99. வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் புனேவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலம் புகழ்பெற்றவர். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
