தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஏரலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆறுமுகமங்கலத்தில் வீற்றிருக்கும் சுடலைமாட சாமி ஐகோர்ட் மகாராஜா என்றழைக்கப்படுகிறார். ஏரலை சேர்ந்த தெய்வத்தடியாபிள்ளை என்பவர் நெல் வியாபாரம் செய்து வந்தார். சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நெல் கொள்முதல் செய்து தனது மாட்டு வண்டியில் ஏற்றி சாத்தான்குளம் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு முறை கணபதிசமுத்திரம் பகுதியில் நெல் கொள்முதல் செய்து கோணிப்பைகளில் நிரப்பி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வரும்போது, […]
