பம்மல் சரஸ்வதிபுரத்தில் பட்டா கத்தியால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்துள்ள பம்மல் சரஸ்வதிபுரம் அருகே ரங்கா நகரிலுள்ள பார்க் ஒன்றில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இளைஞர்கள் சிலர் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்துடன் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனால் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது, ஆயுதங்களுடன் இருந்ததால் பயந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். அப்போது சங்கர் நகர் போலீசார் […]
