நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் முழுவதும் சென்ற ஆண்டு மூடப்பட்டன. அதேநேரத்தில் மாணவர்களுடைய நலன் கருதியும், அவர்களுடைய கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற வகையிலும், கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில் அரசின் கடுமையான முயற்சியாலும், மக்கள் தடுப்பூசி மீது கொண்ட ஆர்வத்தினாலும் கொரோனா பரவல் குறைந்தது. இதையடுத்து நடப்பு ஆண்டில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த காரணத்தினால், தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்தாமல் நேரடி […]
