பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைகழகம் மாணவிகள் நேற்று முன் தினம் தங்களை ஆபாசமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கசிந்த விவகாரம் குறித்து சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களின் பெரும் போராட்டங்களை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 24 ஆம் தேதிவரை 6 நாட்களுக்கு வகுப்புகளை பல்கலைக்கழகம் நிறுத்தி உள்ளது. […]
