Categories
தேசிய செய்திகள்

காற்றுக்காக திறக்கப்பட்ட கதவு… 3 வயது குழந்தையை பறிகொடுத்த பரிதாபம்!

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள கடராய்யன் பால்யா என்ற  கிராமத்தில்  வசிக்கும் தம்பதியினர் தங்களது 3 வயது மகனுடன்  இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் காற்று இல்லாமல் சிரமப்பட்டுள்ளனர். பின்பு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒன்று தூங்கிக்கொண்டிருந்த  3 வயது சிறுவனை தரதரவென வெளியே உள்ள  புதரில் இழுத்துச் சென்றுள்ளது. அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது. இதையடுத்து, அதிகாலை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! விடியற்காலையில் தீடீரென வெடித்து சிதறிய தரை தளம்?…கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க அதே குடியிருப்புக்கு கீழ் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாததால் நேற்று காலை கழிவுநீர் தொட்டி திடீரென அதிக சத்தத்துடன்  வெடித்தது. இதில் குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள  ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு முதல் பலி…! தி.மலையில் 55 வயது பெண் உயிரிழப்பு …..!!

கொரோனால் ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இதுவரை கொரோனாவால் 33 பேர் தமிழகத்தில் உயிரிழந்து இருக்கும் நிலையில் தற்போது 34ஆவது உயிரிழப்பு நிகழ்ந்திருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா  பாதிக்கப்பட்ட ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோரப்பசி.. 70 ஆயிரத்தையும் நெருங்குகிறது உயிரிழப்பு..!!

கொரோனோவின் கோரப் பசிக்கு உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இரவு நிலவரப்படி கோரோனோவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ஆயிரத்து தாண்டிவிட்டது. உயிரிழப்பை பொருத்தவரை 14,887 பேருடன் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 694 பேர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 12,641 எட்டியது. அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

இரட்டை குழந்தைகளின் தாய் மரணம்… 4 நாட்களில் உயிரை பறித்த கொரோனா!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் கோர தாக்குதலுக்கு இரட்டை குழந்தைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் நியூமார்ஸ்கி என்ற பகுதியில் இருக்கும் தீசைடு என்ற நகரத்தை சேர்ந்தவர் கரோலைன் சான்பை (Caroline Saunby) . 48 வயதான இவருக்கு 6 வயதில் ஜோசப் மற்றும் எலியட் என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றார்கள். இவரது கணவர் பெயர் விக்.கரோலைன் நன்கு ஆரோக்கியமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டது. அதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வதந்தியால் 300 பேர் மரணம்… கலங்கி நிற்கும் ஈரான்!

ஈரானில் கொரோனா வராமல் தடுக்கும் என்ற வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர்.   ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,200 பேர் பலியாகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன நாடாக ஈரான் இருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பியதாலும்  […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஸ்மீர்- பாதுகாப்பு படையினர் தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் பலி..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சோபியான் என்னும் இடத்தில், பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கவஜ்போரா ரேபான் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாகவும், அங்கு பதுங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனால் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில்  பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.  இரண்டு  தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இன்னும் பதுங்கியிருக்கும்  தீவிரவாதிகளை தேடும் பணியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பஸ், லாரி மோதல்.. 2 பேர் பலி..15 பேருக்கு மருத்துவமனையில் சிகிக்சை..!!

சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு  பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த […]

Categories

Tech |