அமெரிக்காவில் குழந்தைகளுக்குரிய பால்பவுடருக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், அதிபர் ஜோ பைடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெரும்பாலான தாய்மார்கள் பவுடர் பால் தான் கொடுக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டில் பால் பவுடர் தயாரிக்க கூடிய, மிகப்பெரிய நிறுவனம் ஒன்று பாதுகாப்பு காரணத்திற்காக அடைக்கப்பட்டிருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு பால்பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் அதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய […]
