உணவுத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட நியமன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஓட்டல்களில் கெட்டுப்போன நூடுல்ஸ், சாதம், மிச்சர் போன்றவற்றை […]
