திருப்பரங்குன்றம் இலங்கை தமிழர்கள், உலக நலன் கருதி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கும் உச்ச பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சித்தி விநாயகர் கோவில் இருக்கின்றது. இங்கே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகாமில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் சரவண பொய்கைக்கு புறப்பட்டு வந்தார்கள். பின் பொய்கை நீரில் புனித நீராடி விநாயகரையும் ஆறுமுகப்பெருமானையும் பூஜை செய்து வழிபட்டார்கள். […]
