சில நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் பறவை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்ய அமீரகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலின் எதிரொலியாக அமீரகத்துக்கு, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமீரக பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, “அமீரகத்தில் உள்ள பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தியா, ஓமன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகளும், பலவிதமான பொருட்களும் […]
