பலூனில் கட்டப்பட்ட நாய் ஒன்று பறந்து அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் வீடியோ இணையதளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்க்கப்பட்டுள்ளது. பீட்டர் என்ற பெயரில் சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் நாய் ஒன்று உடலில் பலூனை கட்டிக்கொண்டு நிற்கிறது. தொடர்ந்து நாயை பிடித்திருக்கும் பெண் அதனை விட்டதும், வாயு நிரப்பப்பட்ட பலூனால் நாய் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இந்த வீடியோ எங்கு எப்போது படமாக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. https://youtu.be/r6KmO62LjLE
