மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தாண்டி விற்பனையாகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 28 பைசா உயர்வுக்குப் பிறகு, அங்கு சில்லறை விற்பனைக்கு சேர்க்கைகளுடன் கூடிய பெட்ரோல் லிட்டருக்கு வீதம் ரூ 100 ஐ தாண்டியதாக கூறப்படுகிறது. அதன்படி ஊடகங்களிடம் பேசிய பர்பானி மாவட்ட பெட்ரோல் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அமோல் பெட்சுர்கர், பர்பானியில் சேர்க்கைகளுடன் கூடிய பெட்ரோல் விகிதம் ஒரு லிட்டருக்கு 100.16 ரூபாயை எட்டியுள்ளது. […]
