தற்போதைய காலக்கட்டத்தில் கடன் வாங்குவதும், இஎம்ஐ கட்டுவதும் சாதாரணமாகி விட்டது. கல்வி, மருத்துவம், தொழில் துவங்குவது, வீடுகட்டுவது ஆகிய விஷயங்களுக்காக கடன் பெறலாம். ஆனால் ஒரு பொருளை வாங்கவேண்டும் என்பதற்காக அதிக வட்டியுள்ள பர்சனல் லோன்களை வாங்குவது மிகவும் ஆபத்தானது ஆகும். பொதுவாக கார், கேஜெட், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்க தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மற்ற பாதுகாப்பான கடன்களை விடவும் அதிகமாகும். இவற்றுக்கான வட்டிவிகிதம் 10-24 சதவீதம் வரை இருக்கும். இது வீட்டுக்கடன்களை விடவும் அதிகம் […]
