தமிழகத்தில் நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை அரசுக்கு சில நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தற்போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சென்னையில் உள்ள மண்ணடி தம்பு செட்டி தெருவில் அருணாச்சலம் இம்பேக்ஸ் நிறுவனம், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் தால் மில் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் […]
