பரீனா குழந்தை பெற்ற பிறகு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ”பாரதி கண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் ஆகும். இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வில்லியாக நடித்து வந்த பரீனா கர்ப்பமாக இருந்தபோதும் ஓய்வெடுக்காமல் நடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இவர் குழந்தை பெற்ற பிறகு மருத்துவமனையிலிருந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
