நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் பரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவிலில் தை மாதம் ஆண்டு தோறும் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்ல கூடாது என தடுப்பார். தடையை மீறி நெல்லையப்பர் வேட்டைக்குச் செல்லுவார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடிந்து திரும்பும்போது கோவில்கதவை மூடியதாகவும், […]
