டிஎன்பிஎஸ்சி தேர்வில் பரியேறும் பெருமாள் படம் குறித்து கேள்வி இருந்ததற்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் படைப்பில் உருவான படம் பரியேறும் பெருமாள். இது சமூகநீதி சார்ந்த படமாகும். இதனால் இந்த படம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்ட படமாகும். மேலும் இந்த படத்திற்கு விருதும் கிடைத்துள்ளது. இந்த படம் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. […]
