வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடிய கணவரை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞன் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள விலாங்காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்கள் முன்பு வினோதினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் விலாங்காட்டூர் பகுதியில் வசித்து […]
