தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் டெல்டா பிளஸ் வைரஸும் பரவி வருகிறது. இந்த டெல்டா பிளஸ் வைரஸினால் தமிழகத்தில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் 20 நாட்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பரிசோதனை மாதிரிகளை புனேவில் உள்ள மரபணு சோதனை […]
